விவசாயிகள் தவிப்பதற்கு தி.மு.க அரசே பொறுப்பேற்க வேண்டும்
தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கான பயிர்க்காப்பீடு செய்ய முடியாமல் இரண்டாவது ஆண்டாக விவசாயிகள் தவிப்பதற்கு தி.மு.க அரசே பொறுப்பேற்க வேண்டும்.
உரிய காலத்திற்குள் காப்பீட்டு நிறுவனம் பற்றிய விவரங்களை அறிவிக்காமல் தி.மு.க அரசு மௌனம் காப்பதன் அர்த்தம் என்ன?
நாளொரு வேஷம் போட்டு, வெற்று விளம்பரங்களிலேயே ஆட்சி நடத்தும் தி.மு.க.வினருக்கு விவசாயிகளைப் பற்றி கவலைப்பட நேரமில்லாமல் போனது ஏன்?
உடனடியாக முதலமைச்சர் திரு.ஸ்டாலின், விவசாயப் பயிர்க்காப்பீட்டு பிரச்னை குறித்து மத்திய அரசோடு பேசி, விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்