பஞ்சாப் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து
பஞ்சாப் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குருநானக் தேவ் மருத்துவமனையில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 650 நோயாளிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மருத்துவமனை முழுவதும் தீ பரவியுள்ளதால் 8 தீயணைக்கும் வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை. அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.