UPSC சிவில் சர்வீஸ் 2021 முடிவுகள் அறிவிப்பு! ஸ்ருதி சர்மா முதலிடம்!431735562
UPSC சிவில் சர்வீஸ் 2021 முடிவுகள் அறிவிப்பு! ஸ்ருதி சர்மா முதலிடம்! UPSC CSE 2021: இன்று UPSC சிவில் சர்வீஸ் 2021 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அகில இந்திய தரவரிசையில், ஸ்ருதி சர்மா 1ம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த ஆண்டு முதல் மூன்று இடங்களையுமே பெண்கள் பிடித்துள்ளனர். முதலிடம் பிடித்துள்ள ஸ்ருதி, செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி ஆவார். மேலும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா ரெசிடென்ஷியல் கோச்சிங் அகாடமியில் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி வந்தார். UPSC CSE முதற்கட்டத் தேர்வு அக்டோபர் 10, 2021 அன்று நடத்தப்பட்டது, தேர்வு முடிவுகள் அக்டோபர் 29 அன்று வெளியிடப்பட்டது. முதன்மைத் தேர்வு ஜனவரி 7 முதல் 16, 2022 வரை நடத்தப்பட்டு, முடிவுகள் மார்ச் 17, 2022 அன்று அறிவிக்கப்பட்டன. நேர்முகத்தேர்வின் கடைசிச் சுற்று ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்கி மே 26ஆம் தேதி நிறைவடைந்தது. UPSC சிவில் சர்வீஸ் இறுதி முடிவுகள் 2021: அறிந்து கொள்ளும் முறை 1. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் — upsc.gov.in 2. முகப்புப் பக்கத்தில்...