Tomato and firewood as a wedding gift!-2074694200
திருமண பரிசாக வழங்கப்பட்ட தக்காளி மற்றும் விறகடுப்பு! உணவு சமைப்பதற்கான காய்கறிகளில் மிக முக்கியமாக இருப்பதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய உணவு வகைகளிலும் தென்னிந்திய உணவு வகைகளான குழம்பில் இருந்து ரசம், கூட்டு, தக்காளி சாதம் என்று சமையலில் எங்கு பார்த்தாலும் தக்காளி இல்லையென்றால் சமையலே இல்லை எனும் அளவிற்கு தக்காளி உள்ளது. அப்படிபட்ட தக்காளியின் விலை தற்போது திடீர் என்று கிடு கிடுவென உயர்ந்து கிலோ 120 வரை ஆகி பொதுமக்களை திணற வைத்துள்ளது. இந்தநிலையில் கோவையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தக்காளியை பரிசாக அளித்து மணமக்களை ஆச்சர்யபட வைத்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தெற்கு நகர இளைஞரணி பொருளாளராக இருப்பவர் அக்கீம். இவரது மகளான அப்சானாவிற்கும், ஹாரீஸ் என்பவருக்குமான திருமண நிகழ்ச்சி கோவை குணியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி நிர்வாகிகள் திடீரென மணமக்களுக்கு தக்காளி பரிசு வழங்கி ஆச்சரியப்படுத்தினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத மணமக்களும் அங்கு கூடியிருந்...