அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்: ஜூன் முதல் வாரம் பதவியேற்பு?1405129604
அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்: ஜூன் முதல் வாரம் பதவியேற்பு? திமுக இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் அமைச்சராகப் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து திமுக வட்டாரங்கள் கூறுகையில், உதயநிதியை அமைச்சராக்குவது குறித்து மூத்த தலைவர்கள் துரைமுருகன், டி.ஆர். பாலு, ஆர். எஸ். பாரதி உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்திவிட்டதாகவும் அவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றன. மேலும், சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக சென்னையில் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு, துறை ஒதுக்கீடு செய்வது குறித்து தற்போது ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், ஏற்கெனவே முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட நான்கு பேர் அமைச்சர்களாக இருப்பதால், உதயநிதியையும் அமைச்சராக்குவதில் எந்த இடையூறும் இருக்காது. இந்த நிலையில...