அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு சென்ற வேன் மீது லாரி மோதி விபத்து - 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம்1222685748
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு சென்ற வேன் மீது லாரி மோதி விபத்து - 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கொடுங்காலூர் பகுதியில் இருந்து சென்னையில் நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வேனில் 20 மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, மதுராந்தகம் அந்த வேன் வந்து கொண்டிருந்தபோது, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரட்டை ஏரிக்கரை என்ற இடத்தில் சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மாற்று சாலையில் சென்றது. அப்போது, திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து மற்றும் அதிமுகவினர் வந்த வேன்மீது அந்த லாலி மோதியதில் வேனில் பயணம் செய்த 13 பேரும் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 6 பேரும் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் திருச்சி-சென்னை மற்றும் சென்னை - திருச்சி ஆகிய இரண்டு...