எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கு ரூ.110 கோடியை பறிமுதல் செய்ய அனுமதி நீட்டிப்பு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேலுமணியின் நெருங்கிய உறவினர்கள் நடத்தி வந்த கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம், ஆலம் கோல்டு மற்றும் டைமன்ட் நிறுவனம் ஆகியவற்றின் வங்கி கணக்கில் இருந்த ₹110 கோடியே 93 லட்சத்துக்கு ₹20 ஆயிரத்து 174 நிரந்தர டெபாசிட் தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கம் செய்தது.
இந்த பணத்தை பறிமுதல் செய்ய அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், எஸ்.பி.வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய 110 கோடியே 93 லட்சத்துக்கு 20 ஆயிரத்து 174 ரூபாய் வங்கி நிரந்தர டெபாசிட்டை இடைக்காலமாக பறிமுதல் செய்ய அனுமதியளித்து ...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment