ஆண்டுதோறும் டிசம்பர் 18-ம் தேதி சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவாக கொண்டாடப்படும்.: அமைச்சர் செஞ்சி மஸ்தான்
சென்னை: ஆண்டுதோறும் டிசம்பர் 18-ம் தேதி சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவாக கொண்டாடப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவித்துள்ளார். உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.