கடைசி வர்த்தக நாளில் சர்பிரைஸ் கொடுத்த சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய ஆக்ஸிஸ் வங்கி!


கடைசி வர்த்தக நாளில் சர்பிரைஸ் கொடுத்த சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய ஆக்ஸிஸ் வங்கி!


கடந்த ஏப்ரல் 28 நிலவரப்படி, கடந்த 15 அமர்வுகளில் முதல் முறையாக அன்னிய முதலீட்டாளர்கள் 743.22 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இதுவரையில் தொடர்ந்து முதலீடுகளை வெளியேற்றியவர்கள், தற்போது மிஈண்டும் வாங்க ஆரம்பித்துள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 780.94 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என என்எஸ்இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 15 பைசா சரிவினைக் கண்டு, 76.64 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 76.49 ரூபாயாக சற்று ஏற்றம் கண்டு முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்ந்து அன்னிய முதலீடுகளானது வெளியேறி வரும் நிலையில் சரிவினைக் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


இன்று காலம் ப்ரீ ஓபனிங்கிலேயே சென்செக்ஸ் 331.83 புள்ளிகள் அதிகரித்து, 57,852.89 புள்ளிகளாகவும், நிஃப்டி 65.10 புள்ளிகள் அதிகரித்து, 17,310.10 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 217.92 புள்ளிகள் அதிகரித்து, 57,738.98 புள்ளிகளாகவும், நிஃப்டி 60.40 புள்ளிகள் அதிகரித்து, 17,305.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1436 பங்குகள் ஏற்றத்திலும், 463 பங்குகள் சரிவிலும், 82 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

 

இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் பட்டியலில் ஆக்ஸிஸ் வங்கி, மாருதி சுசுகி இந்தியா, விப்ரோம், அல்ட்ராடெக் சிமெண்ட், ஜஸ்ட் டயல், எல் & டி பைனான்ஸ், ஸ்டார் ஹெல்த், தன்லா பிளார்ட்பார்ம்ஸ், டாடா கெமிக்கல்ஸ், தைரோகேர் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டிய லிஸ்டில் உள்ளன.

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ ஆயில் & கேஸ்,பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி குறியீடுகள் மட்டும் சரிவில் காணப்படுகின்றன. மற்ற அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. எனினும் பெரியளவிலான ஏற்றம் காணவில்லை. அனைத்து குறியீடுகளும் 1% கீழாக ஏற்றத்தில் காணப்படுகின்றன.

 நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள சன் பார்மா, இந்தஸ்இந்த் வங்கி, கோடக் மகேந்திரா, டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், பஜாஜ் ஆட்டோ, பிரிட்டானியா, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகர்களாம் உள்ளன.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், கோடக் மகேந்திரா, எம் & எம், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, விப்ரோ, பவர் கிரிட் கார்ப், மாருதி சுசுகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 தற்போதைய நிலவரம் என்ன?

பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் ஏற்றத்தில் தொடங்கிய சந்தையானது 9.54 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 122.45 புள்ளிகள் அதிகரித்து, 57,643.51 புள்ளிகளாகவும், நிஃப்டி 31.55 புள்ளிகள் அதிகரித்து, 17,276.60 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

Comments

Popular posts from this blog