தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை! எங்கெல்லாம் வாய்ப்பு? - வானிலை ஆய்வு மையம் 1012084747


தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை! எங்கெல்லாம் வாய்ப்பு? - வானிலை ஆய்வு மையம்


தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, 

25.05.22: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 
நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு மற்றும் தேனி ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

26.05.22:  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 
வேலுர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம்,நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

27.05.22, 28.05.22, 29.05.22: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ)

நத்தம் 9, அரியலூர் 6, செட்டிகுளம் 4, அரிமளம், திருமயம், கல்லந்திரி தலா 3, திருப்புவனம், லப்பைக்குடிகாடு, புதுக்கோட்டை தலா 2, கொ‘டைக்கானல், ஆண்டிபட்டி, மதுரை விமான நிலையம், சிவலோகம், விரகனூர் அணை தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.  

Comments

Popular posts from this blog