எல்லா உண்மையும் தெரிந்து விட்டது.. பாரதி கண்ணம்மா சீரியலில் சரியான ட்விஸ்ட்!
எல்லா உண்மையும் தெரிந்து விட்டது.. பாரதி கண்ணம்மா சீரியலில் சரியான ட்விஸ்ட்!
பாரதி கண்ணம்மா சீரியலில் நீண்ட எபிசோடுக்கு பிறகு சீரியலின் கதை ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வரை யார் என் அப்பா? என கேட்டுக் கொண்டிருந்த லட்சுமி இப்போது அப்படியே அமைதியாகிவிட்டார். என் அப்பாவை நானே தேடி கண்டுப்பிடிக்க போகிறேன் என்று கூறிய லட்சுமியின் இந்த அமைதிக்கு பின்னாடி ஏதோ ஒரு உண்மை இருக்கிறது என சவுந்தர்யா கணித்து இருந்தார். அதே போல் இவ்வளவு நாளாக டாக்டர் அங்கிள் என அழைத்த பார்தியை, லட்சுமி டாக்டர் அப்பா என கூப்பிடுவதற்கும் காரணம் இருக்கிறது என்றார் சவுந்தர்யா.
இதையும் படிங்க.. முடிய போகும் பிரபல சீரியல்!
அவர் கணித்தது உண்மை தான், லட்சுமிக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது. பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து இருப்பது, பாரதி தான் லட்சுமி - ஹேமாவுக்கு அப்பா என எல்லா உண்மையும் தெரிந்து விட்டது. ஆனால் எந்த காரணத்திற்காக இருவரும் பிரிந்து இருக்கிறார்கள் என்பது மட்டும் தான் லட்சுமிக்கு தெரியாது. இப்படி இருக்கையில் இன்றைய சீரியலில் அதிரடியான ட்விஸ்ட் அரங்கேறவுள்ளது. இதுக் குறித்த புரமோவும் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, பாரதி ஆஸ்பிட்டலில் இருந்த நேம் போர்டை லட்சுமி வீட்டுக்கு எடுத்து வந்து மறைத்து வைத்திருந்தார். அதில் ’ஐ லவ் யூ அப்பா’ என எ ழுதி வைத்து இருந்தார். நேம் போர்டு வீட்டில் இருப்பதையும் அதில் எழுதி இருப்பதையும் கண்ணம்மா இன்று பார்த்து விடுகிறார். அப்ப, லட்சுமிக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டதா? என அதிர்ச்சியில் செய்வதறியாமல் நிற்கிறார். உடனே சவுந்தர்யாவுக்கு ஃபோன் செய்து நடந்ததை பற்றி கூறுகிறார். இந்த விஷயத்தை கேட்டு சவுந்தர்யாவும் வேணுவும் அதிர்ச்சியில் உறைகிறார்கள். அடுத்து என்ன நடக்கும்? என்பது, வரும் நாட்களில் தெரிய வரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment