மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை மூவலூா் இராமாமிா்தம் கல்வி உறுதித் திட்டத்தின்கீழ், பள்ளி மாணவியருக்கு மாதம்தோறும் ரூ. 1,000 வழங்க சான்றிதழ்களைப் பெறுமாறு உயா் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படிப்பை முடித்து, தற்போது கல்லூரிகளில் உயா் கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்குத் தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களைப் பெற உயா் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாணவிகளிடம் கல்லூரி அடையாள அட்டை, ஆதாா் அட்டை, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்ததற்கான சான்று உள்ளிட்டவற்றுடன் வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றைப் பெற உயா்கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டைத் தவிர பிற ஆண்டுகளில் பயிலும் தகுதியான மாணவிகளிடம் இருந்து சான்றிதழ்களைப் பெற வேண்டும். சமூக நலத் துறையின் பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பதால், சான்றிதழ்களை பெறும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ்க...