பள்ளிகளுக்கு பறந்த திடீர் உத்தரவு - பள்ளிக்கல்வி துறை அதிரடி! 932704142
பள்ளிகளுக்கு பறந்த திடீர் உத்தரவு - பள்ளிக்கல்வி துறை அதிரடி!
பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
அரசுப் பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படியும் பள்ளி மேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி மேலாண்மைக் குழுவை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்வது அவசியம்.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 37,391 அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம், பள்ளி மேலாண்மைக் குழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் அனைத்து பெற்றோர் கூட்டம் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் முன்னிலையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் அமைப்பு, அதன் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம், பெற்றோர்களின் பங்கு மற்றும் அடுத்து நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வில் கலந்து கொள்வதின் முக்கியத்துவம் ஆகியவற்றை பற்றி கலந்தாலோசிக்க வேண்டும்.
இந்நிலையில் 2022 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை, தக்கவைத்தல் குழு, கற்றல் குழு, கட்டமைப்பு குழு, மேலாண்மை குழு என துணைக் குழுக்கள் உருவாக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
பள்ளி மேலாண்மை குழு நடத்துவதற்கான வழிமுறைகளையும் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டு உள்ளது. 2022 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை கூட்டம் நடத்த வேண்டும் என்றும், 50 சதவீத பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Comments
Post a Comment