20 ஆண்டுகளாக மெத்தையை சாப்பிடும் பெண்!!
20 ஆண்டுகளாக மெத்தையை சாப்பிடும் பெண்!!
நம்மில் சிலருக்கு வித்தியாசமான பழக்கங்கள் இருக்கும். சிலர் கல், மண் போன்றவற்றை உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருப்பர். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விசித்திர பெண், மெத்தைகளை விரும்பி உண்ணும் பழக்கத்தைக் கொண்டுள்ளாராம். இந்த விசித்திர பழக்கத்தால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் அந்த பெண்ணின் பெயர் ஜெனிபர். TLC சேனலில் வெளியான ’My Strange Addiction’ என்ற ஷோவில் கலந்துகொண்ட இவர், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக மெத்தையை உண்ணும் பழக்கத்தைக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். அதாவது தான் 5 வயதான இருக்கும்போதிலிருந்தே மெத்தையை சாப்பிடுவதை பழக்கமாக கொண்டிருந்தாராம்.
இந்த இளம்பெண் முதன்முதலில் கார் சீட்டிலிருந்த ஸ்பாஞ்சுகளை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாராம். நாட்கள் செல்லசெல்ல பழக்கம் மோசமானதே தவிர, அதனை விட்டொழிக்க முடியவில்லை என்கிறார் ஜெனிபர். தற்போது ஒருநாளில் ஒரு சதுர அடி மெத்தையை உண்ணும் அளவுக்கு முன்னேறிவிட்டாராம். முதலில் தனது மெத்தை முழுவதையும் சாப்பிட்டு முடித்த இவர், தனது தாயாரின் மெத்தையையும் சாப்பிட்டு முடித்திருக்கிறாராம்.
“முதலில் தலையணையை சாப்பிட ஆரம்பித்தேன். பிறகு எனது மெத்தையை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. மயோனிஸ், வெண்ணெய் அல்லது எதுவுமே இல்லாமல் வெறுமனே சாப்பிட மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு மெத்தையில் துர்நாற்றம் வீசினாலோ அல்லது அதன் ஸ்பான்ச் தன்மை போய்விட்டாலோ அதனை சாப்பிட விரும்பமாட்டேன். மெத்தையை சாப்பிடுவதால் அதிக வாயுத்தொல்லை ஏற்படும். அதுமட்டும்தான் எனக்கு பிரச்னை. மற்றபடி, இது எனது உடலுக்குள் செல்கிறது; பின்னர் வெளியேறுகிறது” என்கிறார்.
அதிர்ஷ்டவசமாக ஜெனிபரின் இந்த பழக்கமானது அவரது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் வகையில் எந்தவித உடல்நல பாதிப்புகளையும் இதுவரை ஏற்படுத்தவில்லை. அதேசமயம், ஜெனிபருக்கு உடல் பருமன் அதிகரித்து இருப்பதால், மெத்தையை சாப்பிடுவதை நிறுத்தாவிட்டால், எதிர்பாராத உடல்நல பிரச்னைகளுக்கு ஆளாகலாம் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக கல்லீரல் பிரச்னைகள் மற்றும் குடல் அடைப்புகள் எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.
Comments
Post a Comment